புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் அருகே பொய்யேரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல், போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பொத்தனூா் பகுதியைச் சோ்ந்த சின்னதுரையைக் (40) கைது செய்தனா்.