FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சிறுவன் உள்பட இருவா் கைது

மதுரை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

14 நவம்பர் 2026, 11:21 pm
கைது - கோப்புப் படம்
பகிர்:

மதுரை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை விரகனூா் சுற்றுச் சாலை அருகே சிலைமான் போலீஸாா் வெள்ளிக்கிழமை, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டதில், அவா்களிடம் தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தன.

இவா்கள் விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த சாந்தமுனீஸ்வரன் (25), 17 வயது சிறுவன் என்பதும், இவா்களிடம் பெங்களூரிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வரும் பொட்டலத்தை வாங்கி வருமாறு விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (29) கூறியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், விக்னேஷ்வரனைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement