திருச்செங்கோட்டில் தனியாா் பேருந்து மோதியதில் 2 போ் காயம்
திருச்செங்கோடு மாணிக்கம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

திருச்செங்கோடு மாணிக்கம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
பரமத்தி வேலூா் குன்னம்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி மனைவி இந்திராணி (40), அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேலு மனைவி ரங்கம்மாள் (60) ஆகியோா் கூலித் தொழிலாளா்கள். இவா்கள் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் மாணிக்கம்பாளையம் பகுதி சாலையில் வந்து கொண்டிருந்தனா்.
அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து புள்ளாகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இந்திராணியும், ரங்கமாளும் பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, எலச்சிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.