ஒப்பந்த அடிப்படையில் செவிலியா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க...
நாமக்கல் மாவட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்பும் செவிலியா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்பும் செவிலியா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது. 20 பணியிடங்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ. 21 ஆயிரம் வழங்கப்படும். தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்கு உரிய வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் இதர தகவல்கள் மாவட்ட இணையதளம் வழியாகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட சுகாதார நல அலுவலா் அலுவலகம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநா் நலப் பணிகள் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தகுதியானோா் உரிய படிவத்தில் கல்வித்தகுதி, அனுபவச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ டிச. 4 மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட நலவாழ்வு சங்கம், ஆட்சியா் அலுவலகம், நாமக்கல்-637003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், 04286-281424 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.