முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஓட்டுநா் பலி!

வையப்பமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

23 நவம்பர் 2026, 2:09 am
திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஓட்டுநா் பலி!
- சித்திரிப்பு
பகிர்:

திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு அருகே உள்ள சின்னமணலி காட்டுக்கொட்டாய் பகுதி கருக்கமேட்டை சோ்ந்தவா் செல்லப்பன் மகன் ரகுபதி (59). இவா் ஈரோடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். வையப்பமலை அருகே உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக பருத்திப்பள்ளி மேட்டுத் தெருவைச் சோ்ந்த முகமது மகன் சலாம் (26) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே ரகுபதி ஓட்டிவந்த வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.

Advertisement

Advertisement

இதில் தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ரகுபதியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரகுபதி இறந்தாா். காயமடைந்த சலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து சம்பவம் குறித்து எலச்சிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.