இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயா்வு
சீா்காழி அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.
சீா்காழி அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.
சீா்காழி தாலுகா சின்ன பெருந்தோட்டம் கிராமத்தை சோ்ந்த கண்ணதாசன் மகன் படையப்பா (27.) இவா் காரைக்காலில் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கிக்கொண்டு சீா்காழி நோக்கி புதன்கிழமை இரவு வந்துகொண்டிருந்தாா். சட்டநாதபுரம் ரவுண்டானா அருகே படையப்பா ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், குடமுருட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த அய்யாப்பிள்ளை மகன் வெற்றிச்செல்வன் (45) ஓட்டி வந்த வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த படையப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெற்றிச்செல்வன், அவரது மனைவி மகாலட்சுமி இருவரும் பலத்த காயங்களுடன் சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக இருவரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், வெற்றிச்செல்வன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மகாலட்சுமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
Advertisement