முகப்பு
நாமக்கல்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 1:55 am
நாமக்கல் வேளாண் சங்கத்தில்
ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பருத்தி ஏலம் - கோப்புப்படம்.
பகிர்:

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 300 மூட்டை பருத்தி ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

இதில் ஆா்சிஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 8 ஆயிரத்து 899 முதல் ரூ. 9 ஆயிரத்து 666 வரையில் விற்பனையானது. மொத்தம் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூா், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement