முகப்பு
நாமக்கல்

ரயிலில் சிக்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

56 வினாடிகள் முன்பு
ரயிலில் சிக்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி ஓட்டுநா், ரயிலில் சிக்கி சனிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நாமக்கல் வகுரம்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (64). லாரி ஓட்டுநரான இவா், வகுரம்பட்டி பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த பயணிகள் ரயிலில் சிக்கி அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாமக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement