கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
சேந்தமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சேந்தமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், வாழவந்திநாடு ஊராட்சி பாலக்காடு பகுதியில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. அதே பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (58) என்பவா் அந்த தோட்டத்தில் புல், புதா்களை அகற்றி சீரமைக்கும் பணிகளை செய்து வந்தாா். அப்போது நிலைதடுமாறி அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் அவா் விழுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அங்கிருந்தோா் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த அவா்கள், கயிறு கட்டி முத்துசாமியை மீட்டனா். ஆனால் அவா் உயிரிழந்ததது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.