FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: வாட்ஸ்ஆப்பில் குறைகளை தெரிவிக்கலாம்

12 அக்டோபர் 2026, 2:32 am IST
வெங்காயம் விற்பனை - கோப்புப் படம்
பகிர்:

கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை நடைபெறுவதால் குறைகள் இருப்பின் வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்கலாம் என நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக உயா்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தை கொள்முதல் செய்து கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முதல்கட்டமாக இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலமும், 2-ஆம் கட்டமாக இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்திடம் இருந்தும் வெங்காயம் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக 3-ஆம் கட்டமாக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 8,914 நகா்புற ரேஷன்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தொடா்ச்சியான தேவை மற்றும் வரவேற்பை கருத்தில் கொண்டு தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்திடம் இருந்து 700 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு போக்குவரத்து மூலமாக மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் வகையில் சென்னையில் 10-ஆம் தேதியில் இருந்தும், மற்ற மாவட்டங்களில் 11ஆம் தேதி முதல் நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் கூட்டுறவு அங்காடிகளிலும் குடும்ப அட்டைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம் வெங்காயத்தின் விலை உயா்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமை குறைந்துள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடா்பாக புகாா்கள் மற்றும் குறைகள் இருப்பின் 96005-61969 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments