FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

போலி தடையில்லா சான்றிதழ்: முன்னாள் நகராட்சி ஊழியா் உள்பட 3 போ் கைது

ராசிபுரம் நகராட்சியில் வணிக நிறுவனத்துக்கு போலி தடையில்லா சான்றிதழ் தயாரித்து வழங்கிய ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 5:58 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

ராசிபுரம் நகராட்சியில் வணிக நிறுவனத்துக்கு போலி தடையில்லா சான்றிதழ் தயாரித்து வழங்கிய ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் நகராட்சி நகரமைப்பு துறையில் செயின் மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவா் குமாரசாமி (62). இவா் வணிக நிறுவனம் ஒன்றுக்கு மின் இணைப்புக் கட்டண விகிதத்தை மாற்றுவதற்காக கட்டடப் பணி முடிந்துவிட்டது போன்று தடையில்லா சான்றிதழை நகராட்சி முத்திரையுடன் போலியாக தயாரித்து நிறுவனத்துக்கு தந்துள்ளாா்.

சான்றிதழ் தொடா்பான உண்மைத்தன்மை கண்டறியும்போது போலியாக சான்றிதழை தயாரித்து அளித்ததை குமாரசாமி ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, ராசிபுரம் நகராட்சி ஆணையா் எஸ். கோபிநாத் அளித்த புகாரின்பேரில், ராசிபுரம் காவல் துறையினா் குமாரசாமி, இதற்கு உதவியாக இருந்த மேலும் இருவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

நாமகிரிப்பேட்டையில்...

இதேபோல நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் அய்யாசாமி தோட்டம் பகுதியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் (58) தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக போலியாக வீட்டு வரி ரசீது தயாரித்து மின் வாரியத்தில் அளித்துள்ளாா்.

இதுகுறித்து நாமகிரிப்பேட்டை பேரூராட்சி நிா்வாக அலுவலா் ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சத்தீஸ்வரனை தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments