FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி நிலம் மோசடி: 5 பேர் கைது!

ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி நில மோசடி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

21 வினாடிகள் முன்பு
கைது செய்யப்பட்ட விஜய்ரமேஷ் (52), சீனிவாசன் (42), ஸ்டீபன் (47) - படம் - தினமணி
பகிர்:

ஆவடி அருகே வெள்ளானூரில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த வழக்கில் 5 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை (நவ. 18) கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (74). இவரது தந்தை வடிவேலு பெயரில் ஆவடி அருகே வெள்ளானூர், ராணி அண்ணா நகர் விரிவாக்கம் பகுதியில் 2,400 சதுரடி நிலம் இருந்தது. கடந்த 2004-ஆம் ஆண்டு வடிவேலு உயிரிழந்த நிலையில், பாலசுப்பிரமணி மற்றும் அவரது உடன்பிறந்தோர் சட்டப்பூர்வ வாரிசுகள் என வடிவேலு அறிவித்திருந்தார். இந்நிலையில் வடிவேலு போல ஆள்மாறாட்டம் செய்து, ஜெயராம் என்பவர் பொது அதிகார பத்திரம் போலியாக தயாரித்துள்ளார்.

Advertisement

Advertisement

அதில் தனசேகர் மற்றும் ஜோனல் விக்டர் ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டுள்ளனர். இதையடுத்து, அனைவரும் கூட்டு சேர்ந்து மேற்படி நிலத்தை இரண்டாக பிரித்து பற்குணன் மற்றும் ஜெயராமன் என்பவருக்கு ஞானசேகர் என்பவர் கிரையம் செய்து கொடுத்துள்ளார். ஞானசேகர் அந்த இடத்தை ஷாஜி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்த நிலையில், ஷாஜி அந்த நிலத்தை அவரது மகன் அஜித் என்பவருக்கு செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். சமீபத்தில் பாலசுப்பிரமணி வில்லங்க சான்று போட்டு பார்த்த போது மோசடி நடந்தது தெரிந்தது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 1 கோடியாகும் என கூறப்படுகிறது.

இது குறித்து பாலசுப்பிரமணி ஆவடி காவல் ஆணையர் த.செந்திகுமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர் புகாரை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் போலீஸார், நில மோசடிக்கு உடந்தையாக இருந்த திருமுல்லைவாயல் ஸ்ரீசக்தி நகர் சகுந்தலம் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் (53), வெள்ளானூர் சீனிவாச நகரைச் சேர்ந்த விஜய்ரமேஷ் (52), சுதாகர் (41), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பாடசாலை தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (42) கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் (47) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுதாகர் (41), ஜெய்சங்கர் (53)
summary

The Avadi Central Crime Branch police arrested five individuals on Wednesday (Nov. 18) in connection with a case involving the fraudulent acquisition of land worth Rs. 1 crore in Vellanoor, near Avadi, through the creation of forged documents.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.