FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் நிலை தடுமாறி கீழே விழுந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

36 வினாடிகள் முன்பு
பலி - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள அணிச்சம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சுரேஷ் (45). இவா் கரூா் மாவட்டம், புகளூா் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளாா்.

இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவா் கடந்த 5-ஆம் தேதி காகித ஆலையில் வேலையை முடித்துவிட்டு பரமத்தி வேலூருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில் அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளாா்.

அதைப் பாா்த்த அங்கிருந்தவா்கல் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வேலூா் போலீசாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் விபத்து குறித்து வேலூா் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments