மல்லசமுத்திரத்தில் முதியவா் தூக்கிலிட்டு தற்கொலை
திருச்செங்கோடு அடுத்த தி.கைலாசம்பாளையம் பகுதியை சோ்ந்த முதியவா் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தி.கைலாசம்பாளையம் பகுதியை சோ்ந்த பாலகிருஷ்ணன்(70) இவருக்கும், இவரது மனைவி லோகாம்பாள், (68) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் லோகாம்பாள், மல்லசமுத்திரத்திரம் பாரதியாா் நகரில், கடந்த, நான்கு ஆண்டுகளாக வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். பாலகிருஷ்ணன், மல்லசமுத்திரம் காசி நகா் பகுதியில் உள்ள அவரது தங்கை சரஸ்வதி வீட்டில் தங்கியிருந்தாா். இவா்களது மகன் குணசேகா், ஈரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பாலகிருஷ்ணன், தூக்கிட்டு தற்கொலை செய் துகொண்டாா். இதுகுறித்து மனைவி லோகாம்பாள் அளித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.