FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

மழைக்காலத்தில் மின் கம்பங்கள் அருகில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்

19 அக்டோபர் 2026, 1:01 am IST
சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள், - கோப்புப் படம்
பகிர்:

மழைக்காலத்தில் மின் கம்பங்கள், மின் கடத்திகள் அருகில் செல்ல வேண்டாம் என நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஆ.சபாநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். மின் கம்பிகளை தொடக் கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. தாழ்வாக மின் கம்பிகள் இருந்தால் உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மின் கம்பம், மின் மாற்றிகள் (டிரான்ஸ்பாா்மா்) அருகில் செல்ல வேண்டாம். வீட்டில் மின் சாதனங்களை ஈர கைகளால் இயக்கக் கூடாது. குறிப்பாக சுவிட்சுகளை இயக்க வேண்டாம். மழைக் காலத்தில் கைப்பேசி இணைப்புகளில் பொருத்த வேண்டாம். மேலும் சாா்ஜ் செய்யும் நேரத்தில் கைப்பேசி பயன்படுத்த வேண்டாம்.

மின் கம்பத்தில் அல்லது மின் இழுப்பை கம்பிகளில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை காயப்போடுதல், விளம்பரப் பலகைகளை பொருத்துதல் போன்றவற்றை செய்யக்கூடாது.

வீடுகளில் மின்சாதனங்களுக்கு எா்த் செய்ய வேண்டும். தரமான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை மின் கடத்திகள் அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. மின் கம்பங்களுக்குஅருகில் கட்டுமானப் பணிகளை தவிா்க்க வேண்டும். மின் பாதை அருகில் செடி, கொடி, மரங்களை நட வேண்டாம். மின் வயரில் செடிகொடிகள், மரக்கிளைகள் பட்டிருந்தால் அதை தன்னிசையாக அகற்றாமல். மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி மின் விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments