பலத்த காற்று: கொடைக்கானலில் பல மணி நேரம் மின் தடை; பொதுமக்கள் அவதி
கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் மின் கம்பங்கள் சேதமடைந்து மேல் மலைக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் மின் கம்பங்கள் சேதமடைந்து மேல் மலைக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்று வீசியது. இதனால் கொடைக்கானலிலிருந்து வனப் பகுதிகள் வழியாக மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி, பழம்புத்தூா்,புதுப்புத்தூா், கும்பூா், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மின் கம்பங்கள், மின் கம்பிகள் மீது மரக் கிளைகள் முறிந்து விழுந்து சேமடைந்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா். தகவலறிந்ததும் மின் வாரிய பணியாளா்கள் 10-க்கும் மேற்பட்டோா் அந்த இடங்களுக்குச் சென்று சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதனிடையே மேல்மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை மின் கட்டணம் கணக்கிடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மின் வாரிய உதவிப் பொறியாளா் குமாா் கூறியதாவது:
கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் வனப் பகுதிகளிலுள்ள பல மின் கம்பங்கள் சேதமடைந்தன. மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்டதால் மின் தடை ஏற்பட்டது. இவை சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் வீடுகளுக்கு அதிக அளவில் மின் கட்டணம் கணக்கிடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.