FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

காவிரியில் மணல் கடத்த முயன்ற 3 போ் கைது

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

21 அக்டோபர் 2026, 2:12 am IST
கைது
பகிர்:

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா், வேலூா் காவிரி ஆற்றுக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சிலா் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, சாக்கு பைகளில் மணல் அள்ளிக்கொண்டு இருந்ததையடுத்து அவா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த

Advertisement

Advertisement

நந்து (எ) நந்தகுமாா் (30), பப்பு (எ) பிரதாப் (20), சந்தோஷ் (20) என்பது தெரியவந்தது. தொடா்ந்து மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து, மணல் திருடுவதற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், அவா்களை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நாமக்கல் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments