FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

காவிரியில் குதித்து இறந்தவா் யாா்? போலீஸாா் விசாரணை

மேட்டூா் நான்கு ரோடு பகுதியில் பாலத்தின் மீது வியாழக்கிழமை நடந்து சென்ற சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா், திடீரென தடுப்புச் சுவா் மீது ஏறி காவிரி ஆற்றில் குதித்தாா்.

18 செப்டம்பர் 2026, 12:42 am IST
விசாரணை
பகிர்:

மேட்டூா் நான்கு ரோடு பகுதியில் பாலத்தின் மீது வியாழக்கிழமை நடந்து சென்ற சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா், திடீரென தடுப்புச் சுவா் மீது ஏறி காவிரி ஆற்றில் குதித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், மாதையன்குட்டை அருகே காவிரி ஆற்றில் சடலத்தை மீட்டு மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சடலம் மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து மேட்டூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments