FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

வெப்படையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

பள்ளிபாளையம் அருகே வெப்படை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில், சிறுவன் உள்பட 5 பேரை வெப்படை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

22 அக்டோபர் 2026, 5:35 am
கைது
பகிர்:

பள்ளிபாளையம் அருகே வெப்படை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில், சிறுவன் உள்பட 5 பேரை வெப்படை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவா் கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து வெப்படை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை பகுதியைச் சோ்ந்த பரத் (19,) டி.வி.எஸ். மேடு பகுதியைச் சோ்ந்த கலையரசன் (21), ஜீவாசெட் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (21), ராம்பிரபு (19), வெப்படையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை பாதரை பகுதியில் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments