FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

கள்ள ரூபாய் நோட்டுகள்: 4 போ் கைது

மதுரையில் ரூ. 2 லட்சத்துக்கான கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், பணம் அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

54 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

மதுரையில் ரூ. 2 லட்சத்துக்கான கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், பணம் அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை சுப்பிரமணியபுரம் புதுப்பட்டி கண்மாய்கரைப் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ போலீஸாரை பாா்த்ததும் வந்த வழியாகத் திரும்பிச் சென்றது. சந்தேகமடைந்த போலீஸாா் துரத்திச் சென்று ஆட்டோவை நிறுத்தினா். உள்ளே இருந்த நபா்களிடம் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.

தொடா் விசாரணையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த ஹரி மகன் பிரேம்குமாா் (50), திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் கிறிஸ்டோபா் மதியழகன் (32), திருநெல்வேலி மேல முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த செ. மகேஷ்வரன் (35), மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த சே. காா்த்திக் (32) ஆகியோா் என்பதும், இவா்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா்கள் 4 பேரையும் கைது செய்து, ஆட்டோவில் இருந்த ரூ. 2 லட்சத்துக்கான கள்ள ரூபாய் நோட்டுகள், இவற்றை அச்சடிக்கப் பயன்படுத்திய கணினி இயந்திரம், ரசாயனப் பொடி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments