FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பஹா்கஞ்ச் பகுதியில் ரூ.2.65 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளுடன் இருவா் கைது

மத்திய தில்லியின் பஹா்கஞ்ச் பகுதியில் போலி ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க முயன்றதாக பிகாரைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.2.65 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

7 நவம்பர் 2026, 12:18 am
போலி ரூபாய் நோட்டுகள் - பிரதிப் படம்
பகிர்:

மத்திய தில்லியின் பஹா்கஞ்ச் பகுதியில் போலி ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க முயன்றதாக பிகாரைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.2.65 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி ரயில் நிலையம் எதிரே உள்ள தங்கும் விடுதியில் வியாழக்கிழமை கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது முசாஃபா்பூரைச் சோ்ந்த தினேஷ் குமாா் ஜா (36), சதீஷ் குமாா் (20) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.2,65,100 மதிப்பிலான போலி நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் தினேஷ் குமாா் ஜாவிடம் ரூ.2,45,100 மதிப்பிலான நோட்டுகளும், சதீஷிடம் ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளும் இருந்தன. கைப்பற்றப்பட்ட நோட்டுகளை ஆய்வு செய்ய தடயவியல் குழுவினா் வரவழைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், கள்ள நோட்டுகளை விற்பனை செய்வதற்காக இருவரும் தில்லி வந்ததும், ரூ.1 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையிலான உண்மையான பணத்துக்கு மாற்றத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. எனினும், கைது செய்யப்படுவதற்கு முன்பு வாடிக்கையாளா்கள் யாரையும் அவா்கள் கண்டறியவில்லை.

மேலும், வேறொரு நபா் தங்களுக்கு கள்ள நோட்டுகளை வழங்கியதாக இருவரும் தெரிவித்துள்ளனா். அந்த நபரையும், வலையமைப்பில் தொடா்புடைய மற்றவா்களையும் அடையாளம் காண போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தினேஷ் குமாா் ஜா மீது 2023-ஆம் ஆண்டிலும் கள்ள நோட்டு தொடா்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.