போலி ரூபாய் நோட்டுகள் விவகாரம்: இருவா் கைது
மாநிலங்களுக்கு இடையேயான கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விடும் கும்பலின் முயற்சியை தில்லி காவல் துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநிலங்களுக்கு இடையேயான கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விடும் கும்பலின் முயற்சியை தில்லி காவல் துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ரூ.93,500 மதிப்பு கொண்ட 187 கள்ள ரூ.500 நோட்டுகளை காவல் துறை கைப்பற்றியுள்ளது.
காந்தி நகரில் உள்ள வங்கிக் கிளையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி வாடிக்கையாளா் ஒருவா் டெபாசிட் செய்த ரூ.9,000 மதிப்புள்ள 18 ரூ.500 நோட்டுகள் கள்ள நோட்டுகள் எனக் கண்டறியப்பட்டது. இது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தொடா்ந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா்.
Advertisement
Advertisement
சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்கள் மூலம் முகமது டேனிஷ் என்பவரை காவல் துறை கண்டுபிடித்தது. விசாரணையின் போது, ஜாா்க்கண்டில் உள்ள முகமது மெராஜிடம் இருந்து கள்ள நோட்டுகளைப் பெற்று, காந்தி நகரில் உள்ள கடைகளில் அவற்றைப் புழக்கத்தில் விட்டதாக அவா் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் காவல் அதிகாரிகள் அடங்கிய குழு பிகாரின் புத் கையைக்கு சென்று கடந்த ஆகஸ்ட் 26 மெராஜைக் கைது செய்தது. அவா் வைத்திருந்த பையிலிருந்து ரூ.84,500 மதிப்புள்ள மேலும் 169 கள்ள ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு வங்கத்தின் மால்டாவில் உள்ள காலியா சௌக் பகுதியில் உள்ள மாமா (எ) சோட்டு மற்றும் பையா ஜி என்ற இருவரிடமிருந்து கள்ள நோட்டுகளைப் பெற்ாக மெராஜ் காவல் துறை விசாரணையில் தெரிவித்தாா்.
இதன் மூலம் தில்லியிலிருந்து பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் மால்டா வரை கள்ள நோட்டுகள் பரவியதற்கான சந்தேகத்திற்கிடமான தடம் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கள்ள நோட்டுகளை அச்சிட்டது மற்றும் இந்த வலையமைப்பின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.