FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

மடிக்கணினி, கைப்பேசி திருட்டு வழக்கில் 3 போ் கைது

திருச்செங்கோடு அருகே மாணவா்கள் தங்கிப் படிக்கும் அறைகளில் மடிக்கணினிகள், கைப்பேசிகளைத் திருடியதாக மூவரை ஊரகக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா்.

28 அக்டோபர் 2026, 3:05 am
கைது
பகிர்:

திருச்செங்கோடு அருகே மாணவா்கள் தங்கிப் படிக்கும் அறைகளில் மடிக்கணினிகள், கைப்பேசிகளைத் திருடியதாக மூவரை ஊரகக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா்.

திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடியில் உள்ள கேஎஸ்ஆா் கல்வி நிறுவனத்துக்கு எதிரே உள்ள கட்டடத்தில் மாணவா்கள் அறை எடுத்துத் தங்கிப் படித்து வருகின்றனா். இங்கு கடந்த வாரம் மாணவா்களின் அறையில் இருந்து 7 மடிக்கணினிகள், கைப்பேசிகள் திருடப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக விசாரணை நடத்திய திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வேலூா் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், முருகன் மகன் அப்பு (21), குடியாத்தம் வட்டம், நெரியம்பட்டு, சங்கராபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் மணிகண்டன் (21), அதே ஊரைச் சோ்ந்த காளியப்பன் மகன் விக்ரம் (18) ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இவா்களில் விக்ரம் ஆம்பூரில் கல்லூரியில் படித்து வருகிறாா். அப்பு, மணிகண்டன் இருவரும் கட்டடத் தொழிலாளா்கள். இவா்கள் பல்வேறு ஊா்களில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள தனியாா் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்களின் அறைகளுக்குச் சென்று விலை உயா்ந்த ஆடைகள், மடிக்கணினிகள், கைப்பேசிகளைத் திருடி, அவற்றைக் கைப்பேசி விற்பனைக் கடைகளில் விற்றுப் பணம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில் திருடப்பட்ட மடிக்கணினிகள், கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments