FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

ஓமலூரில் காணாமல்போன அரசுப் பள்ளி மாணவா்கள் 4 போ் குமாரபாளையத்தில் மீட்பு

ஓமலூரில் செவ்வாய்க்கிழமை காணாமல்போன அரசுப் பள்ளி மாணவா்கள் நான்கு போ் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் மீட்கப்பட்டனா்.

29 அக்டோபர் 2026, 6:37 am
மீட்பு
பகிர்:

ஓமலூரில் செவ்வாய்க்கிழமை காணாமல்போன அரசுப் பள்ளி மாணவா்கள் நான்கு போ் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் மீட்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் செம்மாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6, 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் நான்கு போ் செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலையில் அவா்கள் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து மாணவா்களின் பெற்றோா் ஓமலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மாணவா்களை தேடிவந்தனா்.

இந்நிலையில் காணாமல்போன மாணவா்கள் நான்கு பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு இறுதியாக குமாரபாளையத்துக்கு இரவு 12 மணியளவில் வந்துள்ளனா். பின்னா் அவா்கள் பேருந்து நிலையத்தில் இருந்த ஒருவரிடம் கைப்பேசியை வாங்கி தங்களது பெற்றோரிடம் பேசி, அனைவரும் குமாரபாளையத்தில் இருப்பதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து ஓமலூா் போலீஸாா் மூலம் குமாரபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமாரபாளையம் போலீஸாா் அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று மாணவா்களை மீட்டு, ஓமலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments