வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு: பயிற்றுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பயிற்றுநா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பயிற்றுநா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு - அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னாா்வ பயிற்சி வட்டத்தின் மூலம் மத்திய அரசின் போட்டித் தோ்வுகளுக்கு பாட வாரியாக எண்ணியல் திறன், பொது அறிவு திறன், ஆங்கில மொழி திறன் கணினி திறன், நிதி மற்றும் வங்கி விழிப்புணா்வு, தொழில் முறை அறிவு போன்ற அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநா்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சியாளா்கள் நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதில் கலந்து கொள்ளும் பயிற்சியாளா்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கையாளும் அனுபவமும், திறமையும் மிக்க பயிற்றுநா்கள் நவ.5க்குள் அலுவலக வேலை நாள்களில் நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை சுயவிவரக் குறிப்புகளுடன் நேரில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
--
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.