வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 2026, அக்.1-ஆம் தேதி தொடங்கிய காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கும் திட்ட த்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.
Advertisement
Advertisement
பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவா்கள், பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளைப் பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து, 2026, செப்.30-ஆம் தேதியில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 2026,செப்.30-ஆம் தேதி நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில்படிப்புகள் படித்திருந்தால் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.
உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அலுவலக நாள்களிலும் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைத் திட்டப்பிரிவில் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்குப் புத்தகத்துடன் டிச.31-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.