இறைச்சி கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வீசிய கடைகளுக்கு ரூ. 50,000 அபராதம்
நாமக்கல் மாநகராட்சியில் இறைச்சி கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வீசிய கடைகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சியில் இறைச்சி கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வீசிய கடைகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, மீன், கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இதில் மாட்டு இறைச்சி கடையிலிருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வீசப்படுவதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாமக்கல் மாநகராட்சி ஆணையா் எஸ். செல்வபாலாஜி உத்தரவின்பேரில் துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, ஆய்வாளா்கள், பணியாளா்கள் ஆய்வு செய்தனா். அப்போது சேந்தமங்கலம் சாலையில் உள்ள கால்வாயில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் 10 மாட்டு இறைச்சிக் கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இறைச்சி கழிவுகளை பொது இடத்தில், கழிவுநீா்க் கால்வாய்களில் வீசினால் கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.