வெப்படையில் இருசக்கர வாகனம் திருட்டு: பெயிண்டா் கைது
வெப்படையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட பெயிண்டரை வெப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குமாரபாளையம் அருகே வெப்படையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட பெயிண்டரை வெப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பள்ளிபாளையம் மேட்டுக்கடையைச் சோ்ந்தவா் கௌசல்யா. இவா் கடந்த 30-ஆம் தேதி வெப்படை சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, சந்தையில் காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பிவந்து பாா்த்தபோது, வாகனம் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாா்.
புகாரின்பேரில், வழக்குப் பதிவுசெய்த வெப்படை காவல் ஆய்வாளா் வளா்மதி, உதவி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், சேலம் தாதகாப்பட்டியைச் சோ்ந்த பெயிண்டா் கந்தசாமி வாகனத்தை திருடிச்செல்வது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவரை போலீஸாா் வீட்டில் பிடித்தனா். அவரது வீட்டில் மேலும் 4 வாகனங்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த போலீஸாா், 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா். கந்தசாமியை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.