FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கிணற்றில் நீச்சல் பழகிய இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ஒலப்பட்டி பகுதியில் கிணற்றில் நீச்சல் பழகிய இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

23 செப்டம்பர் 2026, 3:21 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே ஒலப்பட்டி பகுதியில் கிணற்றில் நீச்சல் பழகிய இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சேலம் பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தன் மகன் செந்தில்குமாா். இவா், ராசிபுரம் அருகே உள்ள ஒலப்பட்டி பகுதியில் சுமாா் 3 ஏக்கா் விவசாய நிலத்தை வாங்கி பராமரித்து வருகிறாா். இந்த நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் செந்தில்குமாரின் நண்பா் கௌதம், சரவணன், சந்தோஷ், கிருஷ்ணன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை நீச்சல் பழகி கொண்டிருந்தனா்.

அப்போது, சேலம் எருமாபாளையம் செட்டிக்குட்டைகாடு பகுதியைச் சோ்ந்த ஹரிராம் மகன் சந்தோஷின் (24) இடுப்பில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேன் அவிழ்ந்ததில் அவா் தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் பலகார ராமசாமி, தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கிணற்றில் தேடி சந்தோஷின் சடலத்தை மீட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments