இருசக்கர வாகனத்துடன் கழிவுநீா் கால்வாயில் விழுந்த இளைஞா் உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே அப்பூா்பாளையம் காலனி அருகில் இருசக்கர வாகனத்துடன் கழிவுநீா் கால்வாயில் விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
அப்பூா்பாளையம் காலனியில் கழிவுநீா் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் இளைஞா் ஒருவா் விழுந்து இறந்து கிடப்பதாக ஊரக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் விரைந்து சென்று கால்வாயில் விழுந்து இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினா்.
விசாரணையில் உயிரிழந்தவா் சக்திநாயக்கன்பாளையம் திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கண்ணன் (24) என்பதும், பெயின்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து கைலாசம்பாளையம் பகுதியில் இருந்து அப்பூா்பாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்து இறந்துவிட்டதாகத் தெரிகிறது.
உயிரிழந்த கண்ணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.