சேலத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 37 பவுன் தங்க நகை திருட்டு
சேலத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 37 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 37 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாமாங்கம் அமராவதி நகரைச் சேர்ந்த செல்லாண்டி மகன் ஏழுமலை (49). இவர் உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சனிக்கிழமை மாலை ஆத்தூர் வட்டம், தலைவாசல் அருகேயுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர். இவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் 2 பீரோக்களில் இருந்த 37 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் சோதனை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸார் கூறியது:
மின்வாரிய அதிகாரி ஏழுமலை வெளியூர் சென்றதை அறிந்து திருடர்கள் வீட்டின் பின்புறப்பகுதி வழியாக ஏறி, மாடிக்குச் சென்று அங்கிருந்த கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். விசாரணைக்குப் பிறகுதான் நகைகளைத் திருடிச் சென்றவர்கள் குறித்த விவரம் தெரியவரும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.