FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

பாரா ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பற்றி...

23 அக்டோபர் 2026, 5:20 pm
துளசிமதி முருகேசன்.
பகிர்:

பாரா ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அவ்வணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments