விலையில்லா மின்சாதனப் பொருள்கள் அளிப்பு
எடப்பாடி நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விலையில்லா மின்சாதனப் பொருள்களை மாநில நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்
எடப்பாடி நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விலையில்லா மின்சாதனப் பொருள்களை மாநில நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
எடப்பாடி நகராட்சிப் பகுதியில் விலையில்லா மின்சாதனப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வி.சம்பத் தலைமை வகித்தார். வருவாய்க் கோட்டாட்சியர் சி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வரவேற்றார். நகராட்சிப் பகுதிக்குள்பட்ட 7, 8, 9, 30 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள 2,073 குடும்பத்தினருக்கு விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்டப் பொருள்களை வழங்கி அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், 2,073 பயனாளிகளுக்கு விலையில்லா மின்சாதனப் பொருள்கள் ரூ.ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலும், தமிழக முதல்வரின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 102 நபர்களுக்கு உதவித் தொகையாக ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் சேலம் மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், நகராட்சித் தலைவர் டி.கதிரேசன், துணைத் தலைவர் சி.ராமன், மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் ஏ.முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.