ஆத்தூர் தொகுதியில் பல்வேறு கட்டடங்கள் திறப்பு
ஆத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்ட பல்வேறு புதிய கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாதேஸ்வரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ஆத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்ட பல்வேறு புதிய கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாதேஸ்வரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ஆத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைத்தும், புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாதேஸ்வரன் தொடக்கிவைத்தார்.
ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியில் அரசநந்தம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கல்பகனூர் ராமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அங்கன்வாடிக் கட்டடங்கள், ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகர் பகுதியில் புதிதாகக் கட்ட இருக்கும் அங்கன்வாடி கட்டடத்துக்கு பூமி பூஜை நடைபெற்றது.
Advertisement
Advertisement
சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நுழைவு வாயில், ஆத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவருடன் கூடிய நுழைவு வாயில், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கொண்ட கட்டடம் உள்பட ரூ.97 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாதேஸ்வரன் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் எஸ்.செல்வமணி, இளநிலைப் பொறியாளர் பிரேமா, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் சுகந்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாந்திபாஸ்கர், மணிமுருகேசன்,விஸ்வநாதன், ஜெயலட்சுமி, மணி, தலைமை ஆசிரியர்கள் இளம்பூரணன், ஷேக்உசேன், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.டி.அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.