FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தம்மம்பட்டி அருகே வரட்டாற்றில் பாலம் கட்டப்படுமா?மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

தம்மம்பட்டி அருகே வரட்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டக்கோரி அப்பகுதியினர் கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தம்மம்பட்டி அருகே வரட்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டக்கோரி அப்பகுதியினர் கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ஜங்கமசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இப்பகுதி கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. கொல்லிமலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்போர் தங்களது விளைபொருள்களை விலைப் பொருள்களாக்க தம்மம்பட்டிக்குத்தான் கொண்டு வரவேண்டியது உள்ளது. அதேபோல தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு கொல்லிமலைக்கு திரும்பிச் செல்ல போக்குவரத்து வசதி இன்றி மலை கிராம மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியினர், கொல்லிமலைக்கு, தம்மம்பட்டியிலிருந்து சந்தைச் சாலை, வன அலுவலகம் வழியாகச் செல்ல வேண்டும். அங்கு வரட்டாறு குறுக்கே செல்கிறது. இதில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, மலை கிராம மக்களின் போக்குவரத்து வரட்டாறு வழியே முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

அப்போது விளைபொருள்களை ஏற்றிச்செல்ல இயலாமல், விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாற்றுப் பாதையில் செல்ல 12 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கொல்லிமலை, புலிக்கரடு பகுதி மக்கள் கூறியது:

புலிகரடு அடிவாரப் பகுதியில் செல்லும் வரட்டாற்றில் மழைக் காலத்தின்போது பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்லும்போது கொல்லிமலைக்கு செல்லமுடிவதில்லை.அதனால், தமிழக அரசு வரட்டாற்றில் பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments