FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாக்காளர் பட்டியலிலிருந்து 5,258 பேர் நீக்கம்

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி அண்மையில் நடைபெற்றது. இதில் 5,258 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி அண்மையில் நடைபெற்றது. இதில் 5,258 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி சங்ககிரி வாக்காளர் பதிவு அலுவலர் சி.பால்பிரின்ஸ்லிராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியங்கள், தாரமங்கலம் பேரூராட்சிப் பகுதி உள்ளிட்ட 301 வாக்குச்சாவடி மையங்களுக்குள்பட்ட வாக்காளர் பட்டியலிருந்து இருமுறை பெயர் உள்ளவர்கள் 2,994 பேர், இறந்தவர்கள் என கருதப்படும் 2,264 பேர் என மொத்தம் 5,258 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments