FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடனுதவி: மாவட்ட ஆட்சியர்

இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்  என மாவட்ட ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ்தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்  என மாவட்ட ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ்
தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு - மகளிர் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தொழில்திறன் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ. குழந்தைவேல் பேசினார். முகாமுக்கு மாவட்ட ஆட்சியர்  ஆர். ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:
இதுபோன்ற பயிற்சி முகாம்களில் மகளிர் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் சேர்ந்து தங்களுக்கு உரிய பயிற்சியைப் பெற்று சிறந்த தொழில்களைத் துவங்கிட முன்வர வேண்டும்.
பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களே வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதற்கு முன் வருகிறது. எனவே, இதுபோன்ற பயிற்சி முகாம்களை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பயிற்சி பெற்ற இளைஞர்கள் சுயத் தொழில் தொடங்க முன் வந்தால் அவர்களுக்கு ரூ. 5 கோடி வரை அரசு கடனுதவி வழங்கி வருகிறது. அதைப் பெற்று சுயத் தொழில் தொடங்கி அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
இத் திட்டத்தின் மூலம் நிகழாண்டுக்கு சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 வகையான டிரேடுகளில் சுமார் 2,835 இளைஞர்களுக்கு தொழிற்திறன் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இப் பயிற்சிகளை வழங்க தகுதி வாய்ந்த 18 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த நிறுவனங்களிலேயே உண்டு உறைவிட  வசதியுடன் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை, நாமக்கல், சேலம்  மாவட்டங்களில் அமைந்துள்ளன. இளைஞர்கள், மகளிர் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து பயிற்சி பெற்று வேலைவாய்ப்பைப் பெறலாம். மேலும் ரூ.1,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி இலவசமாக இருந்தாலும், இதற்காக ரூ.1 லட்சம் வரை அரசு செலவு செய்கிறது. இத் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில்  கடந்த 2014-16 இரு ஆண்டுகளில் 599 நபர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு  ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த  2016-17 ம் ஆண்டு 120 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போது 65  நபர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.  இப் பயிற்சி பெற்றவர்கள் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பணி புரிந்து வருகின்றனர். மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் பயிற்சி பெறும் நபர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எஸ்.செல்வகுமார் வரவேற்றார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை துணை இயக்குநர் ஒ.செ. ஞானசேகரன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ராமச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் உள்பட அரசு  அலுவலர்கள் ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மகளிர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் டி.ஆர். விஜயகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments