சேலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி
கழிவறை வசதி, இணையதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.
கழிவறை வசதி, இணையதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கழிவறை வசதி உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணி செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலகம் முன் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகிய பல்வேறு சான்றிதழ்கள் கிடைக்க பெறாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
பேரணியில் அமைப்புச் செயலாளர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரணியையொட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.