FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புத்தாண்டு முதல் மொபைல் ஆப் மூலம் மாணவர் வருகைப் பதிவு: தொடங்கியது வெள்ளோட்டம்

தமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் வரும்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் வரும் புத்தாண்டு முதல் செல்லிடப்பேசி செயலி மூலம் மாணவர் வருகைப் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கான சோதனை வெள்ளோட்டம் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது.
கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர் வருகைப் பதிவு, பதிவேடுகளில்தான் ஆசிரியர்களால் காலை, மாலை ஆகிய நேரங்களில் குறிக்கப்படுகிறது.
தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையானது, மாணவர் வருகைப் பதிவை செயலி மூலம் பதிய  டிஎன் ஸ்கூல்ஸ் எமிஸ் செல் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம்  ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும், உதவி ஆசிரியர்களும் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அந்தந்த பள்ளிகளின் யுடைஸ் எண்ணை யூசர் நேமாக உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு அந்தப் பள்ளிகளின் எமிஸ் இணையதள, கடவுச்சொல்லை உள்ளீடு செய்தால் செயலி திறந்துவிடும்.
அதில் வகுப்புவாரியாக பள்ளி மாணவ, மாணவியர் பெயர்கள் வரிசையாக இருக்கும்.
பெயர்களுக்கு நேர் எதிரே  பி என்று ஆங்கில எழுத்து இருக்கும். எந்தெந்த மாணவர் ,அன்றைய தினம் பள்ளிக்கு வரவில்லையோ,அவர்களது பெயர்களுக்கு எதிரே உள்ள பி என்ற ஆங்கில எழுத்தை, தொட்டால் ஏ என்று ஆங்கில எழுத்து வரும்.
அது அந்த மாணவர்க்கு ஆப்சென்ட் என்று குறிக்கும்வகையில்  அமையும்.இதுபோல் ஒவ்வொரு வகுப்பிற்கும் காலை 11 மணிக்குள் ,மாணவர் வருகைப்பதிவை முடிக்கவும், அதேபோல் பிற்பகல் மாணவர் வருகைப்பதிவையும் இதேபோல்  செயலி மூலம் பதிவேற்றம் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதனை கட்டாயமாக்கவும், அதுவரை அனைத்துப் பள்ளிகளும் சோதனை ஓட்டமாக செய்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியது: நெட்வொர்க் வேகம் குறைவாக உள்ளது. சில இடர்பாடுகளை நீக்கினால் இச் செயலியை மிக விரைவாக செயல்படுத்த முடியும் என்றனர். இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியது:
வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இச் செயலி மூலம்தான்  வருகைப் பதிவை கடைப்பிடிக்க வேண்டும்.  இச் செயலில் உள்ள சில இடர்பாடுகள் அடுத்தடுத்து வரும் காலகட்டத்தில் நீக்கப்பட்டு விடும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments