FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஓமலூர் அருகே காரில் எரிவாயு நிரப்பியபோது விபத்து: இரு கார்கள் எரிந்து சேதம்

ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரில் இருந்து காருக்கு எரிவாயு நிரப்பியபோது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தீ விபத்தில் இரு கார்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 7 ஜூன் 2018, 9:34 am IST
பகிர்:

ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரில் இருந்து காருக்கு எரிவாயு நிரப்பியபோது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தீ விபத்தில் இரு கார்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டியைச்  சேர்ந்தவர் பெருமாள் மகன் சுரேஷ்.  இவர் அந்தப் பகுதியில் பகுதியில்  வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களில் இருந்து கார்களுக்கு எரிவாயு நிரப்பிக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.  
இந்த நிலையில், அவர் வீட்டில் இல்லாத போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது காரை கொண்டு வந்து, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரில் இருந்து காருக்கு எரிவாயு நிரப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.  அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததாகத் தெரிகிறது.   இதில் அந்த காரும், அருகே நிறுத்தப்பட்டிருந்த  மற்றொரு காரும் தீப்பற்றி எரிந்தன.  
இதில் தீ  சுமார் 20 அடி உயரத்துக்கு எரிந்ததால்,,  அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
அந்தப் பகுதி மக்கள் தண்ணீரைக்  கொண்டு வந்து ஊற்றித் தீயை அணைத்தனர்.  ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.   இதையடுத்து,  ஓமலூர் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.   சம்பவ இடத்துக்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
மேலும்,  அருகில் இருந்த ஒரு தென்னை மரமும் தீ விபத்தில்  முற்றிலும் எரிந்து சேதமானது .  இந்த தீ விபத்து குறித்து  தீவட்டிப்பட்டி போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments