மேட்டூர் அணை நீர்வரத்து 13,694 கனஅடியாக சரிந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினிக்கு நீர்வரத்து சரிந்து வருவதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டது
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினிக்கு நீர்வரத்து சரிந்து வருவதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 18,428 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 13,694 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54. 71 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 20.90 டி.எம்.சி.யாக இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் மாறுபடுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.