FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வாழப்பாடி பகுதியில் விற்பனைக்கு குவிந்துள்ள பலாப்பழங்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், பொதுமக்கள் கூடுமிடங்கள், தினசரி சந்தை, வாரச்சந்தைகள் மற்றும் நடமாடும் கடைகளிலும்,

Updated On : 26 ஜூன் 2018, 9:42 am IST
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், பொதுமக்கள் கூடுமிடங்கள், தினசரி சந்தை, வாரச்சந்தைகள் மற்றும் நடமாடும் கடைகளிலும், கொல்லிமலை, கல்வராயன்மலை பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் என்பதால், பலாப்பழங்களை பொதுமக்கள் விரும்பி கொள்முதல் செய்து செல்கின்றனர். அதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிராமங்களில் பலா மரங்கள் நிறைந்து காணப்படுவதால், ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்கு பலாப்பழம் அதிகளவில் உற்பத்தியாகிறது. அதேபோல் சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, அருநுôற்றுமலை, சந்துமலை, நெய்யமலை கிராமங்களிலும் நீண்ட கால பலன் தரும் பலா மரங்கள் நிறைந்துள்ளதால், கணிசமான அளவிற்கு பலாப்பழங்கள் விளைகிறது.
 நிகழாண்டு, பலா மரங்கள் பூத்து பிஞ்சுகள் காய்க்கும் தருணத்தில் கோடை மழை கை கொடுத்ததால், பலா விளைச்சல் அதிகரித்துள்ளது.
 மலை கிராமங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் பலாப்பழங்களை கொண்டு வரும் விவசாயிகளும், வியாபாரிகளும், வாழப்பாடி, பேளூர், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், சிங்கிபுரம் உள்ளிட்ட வாரச்சந்தைகளிலும், வாழப்பாடி, பேளூர் பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் தினசரி சந்தைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பலாப்பழங்களை குவித்து கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றனர். தரம் மற்றும் பருமனுக்கேற்ப ரூ.100 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments