FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மேட்டூர் ஜிவி மேல்நிலைப் பள்ளி சாதனை

எஸ்.எஸ்.எல். சி. பொதுத்தேர்வில் மேட்டூர் மாசிலாபாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.

Updated On : 25 மே 2018, 2:36 am IST
பகிர்:

எஸ்.எஸ்.எல். சி. பொதுத்தேர்வில் மேட்டூர் மாசிலாபாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் இருவர் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒருவர் 489-ம், மற்றொரு மாணவர் 485 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இப்பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் இருவர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் இருவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் ஒருவரும், அறிவியலில் 5 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளி மாணவ-மாணவியர் 9 பேர் 475-க்கு மேலும், 32 பேர் 450-க்கு மேலும், 79 பேர் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments