FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆத்தூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு பிரிவினர் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆத்தூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு பிரிவினர் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
 ஆத்தூரை அடுத்த கருத்தராஜபாளையத்தில் உள்ள மூப்பனார் கோயிலில் வழிபட இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரை கோயிலில் வழிபடவும், ,சாலையை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர். இதனைக் கண்டித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வனிடம் ஒப்படைக்கப் போவதாக முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர், வட்டாட்சியர் செல்வத்திடம் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments