தம்மம்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தம்மம்பட்டியில் வாரக்கணக்கில் குடிநீர் விநியோகிக்காத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகர தி.மு.க. சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தம்மம்பட்டியில் வாரக்கணக்கில் குடிநீர் விநியோகிக்காத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகர தி.மு.க. சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக நகர பொறுப்பாளர் ந.சண்முகம் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சின்னுசாமி, கெங்கவல்லி ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், நகர இளைஞரணி அமைப்பாளர் சையத்சாவலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும் தட்டுப்பாடின்றி காவிரி குடிநீரை வழங்கிடவேண்டும், அனைத்து வார்டுகளுக்கும் சாக்கடை, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும், சொத்துவரி ரசீது வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நகர துணைச் செயலாளர்கள் பழனிமுத்து, அருள்செல்வி, கலியவரதராஜ், மற்றும் ரவி, கண்ணன், நகர,ஒன்றிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை அடுத்து தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்று, புதிய பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.