மேட்டூரில் தனியார் பேருந்தை இயக்கும் பெண் பேருந்து ஓட்டுநர்!
சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்தை இயக்கும் பெண் பேருந்து ஓட்டுநர் அந்தப் பகுதியில் கவனம் ஈர்த்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் சேர்ந்தவர் மணி (60). கால்நடை விற்பனை மற்றும் சொந்தமாக லாரி வைத்து ஒட்டி வருகிறார். இவரது மகள் தமிழ்ச்செல்வி(28) சிறு வயது முதலே தந்தையுடன் லாரியுடன் பயணம் செய்து லாரியை இயக்கவும் கற்றுக் கொண்டார். பின்பு லாரியை இயக்க முறையாக பயிற்சி பெற்று கனரக ஒட்டுனர் உரிமம் பெற்றார். தமிழ்செல்வி சில ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சரக்கு லாரியை ஒட்டி வந்தார். பின்பு சேலம், நங்கவள்ளியில் உள்ள பெண்கள் தனியார் கல்லூரியின் வழித்தட பேருந்தை ஒட்டி வந்தார்.
இதையும் படிக்க: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் தேரோட்டம்!
இந்நிலையில் தற்போது மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை தமிழ் செல்வி ஓட்டி வருகிறார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தமிழ் செல்வி கூறுகையில் நீண்ட நாட்களாக கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் பணிக்கு முயற்சி செய்வதாக தெரிவித்தார். தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.