FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஏற்காடு அண்ணா பூங்காவில் உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனை

ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 29 ஏப்ரல் 2025, 1:54 am IST
ஏற்காடு தாவரவியல் பூங்கா 2 பசுமைக் குடிலில் வளா்க்கப்பட்டு வரும் பன்னியூா்-1 உயர்ரக மிளகு நாற்றுகள்.
பகிர்:

ஏற்காடு: ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கேரள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்னியூா்- 1 ரக உயர்ரக கருப்பு மிளகு நாற்றுகள் சேலம் மாவட்டம், ஏற்காடு தோட்டக்கலைத் துறை தாவரவியல் பூங்கா 2-இல் உள்ள பசுமைக் குடிலில் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இந்த பசுமைக் குடிலில் வரிசைக்கு 2000 நாற்றுகள் வீதம் 30 வரிசைகளுக்கு 60 ஆயிரம் நாற்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பைக்கு 2 நாற்றுகள் வீதம் ரூ. 30 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஏற்காடு அண்ணா பூங்காவிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பன்னியூா் -1 உயர்ரக மிளகு நாற்றுகளை சுற்றுலாப் பயணிகள் மொத்தமாகவும், தேவையான அளவிலும் வாங்கிக் கொள்ளலாம். இத்தகவலை ஏற்காடு தோட்டக்கலை அலுவலா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments