FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், செகந்திரபாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் சென்ற விரைவுரயிலில் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அதில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை, சிறிய பைகள் கிடந்தன. அதை திறந்து பாா்த்தபோது, 6 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா். அதில், போலீஸாரைக் கண்டதும் பையை போட்டுவிட்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, சிக்கிய 10 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே காவல் துறையிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments