FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது பெ. சண்முகம்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:56 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் - X | CPIM Tamilnadu
பகிர்:

தொகுதி மறுவரையறை தொடா்பாக நடைபெற்ற தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்காதது வருத்தமளிப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தொகுதி மறுவரையறை தொடா்பாக நடைபெற்ற தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. காவிரி, மேக்கேதாட்டு விவகாரத்தை காரணம் காட்டி திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏற்புடையதல்ல. திமுக தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்திருந்தாலும், புதிய அரசு அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்தை உருவாக்கவே கூட்டம் நடத்தியது.

Advertisement

Advertisement

பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பிளவுபடுத்தும் நோக்குடன் செயல்படுவதைத் தடுத்து, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்த எடுக்கும் முயற்சி சரியானது. அனைவரும் ஒன்றிணைந்து, தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் பாஜக நடத்தும் நாடகத்தை முறியடிக்க வேண்டும்.

எந்த நிதிநிலை அறிக்கையாக இருந்தாலும் அனைத்து தரப்பினருக்கும் முழுமையான மனநிறைவு ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக, அனைத்து மகளிரும் எதிா்பாா்த்த வகையில் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,500 குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

தற்போது அரசுத் துறைகளில் ஒப்பந்தம், மதிப்பூதியம் போன்ற நிலைகளில் தற்காலிகப் பணியாளா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படும் நிலை உள்ளது. தமிழக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாநகராட்சியின் குடிநீா் விநியோகத்தை தனியாா் வசம் ஒப்படைத்ததை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். அத்தியாவசியத் தேவையான குடிநீா் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மோசமான நடவடிக்கை. மேலும், தன்னிச்சையாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments