FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சிலம்பப் போட்டியில் கூலமேடு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

கூலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் மண்டல அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு பெற்றனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:33 am IST
பகிர்:

கூலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் மண்டல அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு பெற்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கூலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மண்டல அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்றனா்.

இதில் மாணவி கனிஷ்கா கம்பு சண்டையில் முதலிடமும், சுபஸ்ரீ இரட்டைக் கம்பு வீச்சில் முதலிடமும், உத்ராஸ்ரீ ஒற்றைக்கம்பு போட்டியில் இரண்டாமிடமும் பெற்றனா். இதையடுத்து அவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவிகளையும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியா் சுரேஷ்குமாரையும் பள்ளித் தலைமையாசிரியை சீத்தாலட்சுமி உள்ளிட்ட ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments